Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2021 21:59:04 Hours

தரிசு நிலங்களில் தென்னம் பிள்ளைகள் நாட்டி பசுமையாக்கிய படையினர்

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் பயன்படுத்தப்படாத நிலப்பரப்பில் 350 தென்னம் பிள்ளைகள் படையினரால் நாட்டப்பட்டது.

இத் தெங்கு செய்கையினை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க திங்கட்கிழமை (21) தென்னங் கன்றுகளை நாட்டி வைக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மேற்படி கன்றுகளை குளியாபிட்டியவை சேர்ந்த திரு. சேனக ரொட்ரிகோ அவர்கள் நன்கொடையாக வழங்கியிருந்ததோடு, ஏனைய முகாம்களுக்கும் கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன.

'துரு மிதுரு - நவ ரட்டக்' திட்டம் மற்றும் சேதன பசளை உற்பத்தி செய்வதற்கு பங்களிப்பு வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகள், இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அனைத்து பகுதிகளிலும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் தீபால் ஹத்துருசிங்க, பிரிகேடியர் பொதுப்பணி ஊழியர்கள் விவகாரம் தொடர்பான பிரிகேடியர் பிரபாத் கொடிதுவக்கு, சிரேஸ்ட பதவிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.