Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2022 16:42:29 Hours

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சார்த்திகள் ஊக்கத்தொகை வழங்கல்

எதிர்வரும் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளை தயார்படுத்தும் நோக்கில் ஒரு புதிய செயற்திட்டமான ‘பஹட பஹக்’ 2022 அக்டோபர் 25 அன்று வெலிஓயா 622 வது பிரிகேட் படையணி பகுதியில் ஆரம்பமாகியது.

வெலிஓயா பிரதேசத்தில் உள்ள 15 பாடசாலைகளைச் சேர்ந்த 290 தரம் ஐந்து மாணவர்களுக்கு 10 தொகுதி மாதிரி வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டது. 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

622 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஏனோஜ் ஹேரத் அவர்களின் மேற்பார்வையில் 9 மற்றும் 20 வது கஜபா படையணி படையினரால் இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவ நண்பர்கள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வெளியேறிய பட்டதாரிகள் மற்றும் நண்பர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுசரணை வழங்கினர். இத் திட்டத்திற்கான முயற்சியை திரு பிரசாத் லொகுபாலசூரிய அவர்களுடன் பழைய மாணவர் குழுவின் ஏனைய உறுப்பினர்களான திரு திலங்க மெண்டிஸ், திரு குஷான் சதுரங்க, திரு நதீர ஜயசிங்க, திருமதி சந்தமாலி கோனகல மற்றும் திரு சச்சித் கயான் விக்கிரமாராச்சி ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்டது.