Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2021 20:00:18 Hours

தரமுயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கு கௌரவ மரியாதை

இராணுவத் தளபதியிடமிருந்து தரமுயர்வு சின்னத்தினை அணிவித்துக் கொண்ட 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு, புதன் கிழமை(13) மிரிசுவில் பகுதியில் அமைந்துள்ள அப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது .

அங்கு வருகையினை மேற்கொண்ட தளபதிக்கு 7 மற்றும் 15 வது கஜபா படையணியின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொர்ந்து முகாம் வளாகத்தில் ஒரு மா மரக்கன்று ஒன்றினை நட்டுவைத்த அவர் ஒரு குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

பின்னர், மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க 52 வது படைப்பிரிவின் படையினரிடம் உரையாற்றியதோடு அனைத்து படையினருடன் தேநீர் உபசரிப்பிலும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 52 வது படைபிரிவின் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.