05th January 2020 07:00:55 Hours
அரசபுரகுளத்தில் அமைந்துள்ள 66 ஆவது படைப் பிரிவின் பட்டாலியன் பயிற்சி முகாமில் படையினர்களுக்கான தமிழ்மொழி பாடநெறி பயிற்சி பட்டறை இம் மாதம் (3) ஆம் திகதி இடம்பெற்றன.
66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மங்கள விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் 663 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சுபசான லியனகே அவர்களது தலைமையின் கீழ் 34 படை வீரர்களது பங்களிப்புடன் இந்த பயிற்சி பட்டறை மேற்கொள்ளப்பட்டன.
படையினர்களுக்கு தமிழ் மொழித் தேர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கும் தரப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு இந்த பயிற்சி பட்டறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பயிற்சி பட்டறையில் தமிழ் நாடகங்கள் மற்றும் பாடல்கள் முன்வைக்கப்பட்டன.
நான்காவது இராணுவ புலனாய்வு படையணி மற்றும் 4 மகளிர் படையணியைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களினால் இந்த பயிற்சி பட்டறைகளில் விரிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டன.latest jordans | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff