Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2021 15:51:10 Hours

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் முடிக்கப்படல் வேண்டும்- தலைவர், கொவிட் தடுப்பு செயலணி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது விரைவில் நிறைவடையும் என கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் (NOCPCO) இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சிறப்பு ஊடக அறிக்கையில் அறிவித்தனர். அவரது முழு அறிக்கையை பின்வருமாறு:

இன்று காலை (03) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கொவிட் -19 கட்டுப்பாட்டிற்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 2021 செப்டம்பர் மாதம்13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு மேற்பட்ட 88 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இதுவரை தடுப்பூசியின் இரண்டு மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அங்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பல்வேறு மாவட்டங்களில் சில குறைபாடுகள் பதிவாகியிருந்தாலும், வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி கிடைக்கப்பெறும் எனவே அனைத்து மாவட்டங்களிலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் ஒரு வார காலத்திற்குள் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.