Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2021 15:00:16 Hours

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை படையினரால் அழிப்பு

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் சிப்பாய்களால் செவ்வாய்க்கிழமை (3) தனமல்வில கெம் ஹத வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை செவ்வாய்க்கிழமை (3) அழிக்கப்பட்டது.

25 பெர்ச்சஸ் நிலத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கஞ்சா பயிர் செய்கை சுமார் 10 மில்லியன் பெறுமதியானது என்பதுடன், வனப் பகுதிக்குள் மறைமுகமாக குறித்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தனமல்வில பொலிஸார் படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து உரிய இடத்தை படையினர் கண்டறிந்தனர்.

தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.