Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2021 15:10:12 Hours

தனது புதிய அலுவலகத்தை பிரிகேடியர் அஜித் விக்ரமசேகர பொறுப்பேற்றார்

பனாங்கொட இராணுவ வாளகத்தில் இராணுவ ஆராய்ச்சி, பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு கிளையின் புதிய பணிப்பாளராக இலங்கை சமிஞ்சை படையணியின் பிரிகேடியர் அஜித் விக்ரமசேகர (எஸ்எல்எஸ்சி) வியாழக்கிழமை (16) பொறுப்பேற்றார்.

மத வழிபாடுகளின் பின் புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் தனது பதவியேற்பிக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொன்டார்.

இந்த நியமனத்திற்கு முன், பிரிகேடியர் அஜித் விக்ரமசேகர பாதுகாப்பு அமைச்சில் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றினார். அவர் சமீபத்தில் காலமான பிரிகேடியர் எஸ்.டி உதயசேனாவுக்குப் பதிலாக குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பணிப்பக பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள், பணியாளர்கள், மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.