Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2025 13:49:01 Hours

தந்த தாது வழிப்பாடிற்கு இராணுவத்தின் பங்களிப்பு

புத்தரின் புனித தந்த தாது கண்காட்சி ஸ்ரீ தலதா மாளிகையில் 2025 ஏப்ரல் 18 முதல் 27 ஏப்ரல் 2025 வரை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் மழை பெய்யவும், செழிப்பு, நல்லிணக்கம் மற்றும் நாட்டிற்கு அமைதி கிடைக்கவும் பிரார்த்தனை செய்வதன் மூலம் நீதியான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தலதா வழிப்பாட்டு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலதா வணக்கத்தின் இறுதி நோக்கம், புத்த மறுமலர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக, மிகவும் விவேகமான, ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

இந்த நோக்கத்தை நிறைவேற்ற, இலங்கை இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவப் படையினர் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைபிரிவின் கீழ் இயங்கும் அனைத்து பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் படையினர் புனித தந்த தாதுவை வணங்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.