Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2021 15:22:37 Hours

தண்டுகம் ஓயா பெருக்கெடுப்பால் உடைப்பெடுத்த கரையினை படையினரால் திருத்தம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினர் அத்தனகலு ஓயாவின் துணை நதியான தண்டுகம் ஓயா கரை போதி ராஜராமய வீதி தும்மோதர எனும் இடத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக 5 அடி வரை வெள்ள அளவு வௌ்ள நீர் புகுந்தமையால் அதற்கான நிவாரண பணிகளுக்கு விரைந்து சென்றனர்.

படையினர் சக கடற்படை வீரர்களுடன் இணைந்து மணல் மூடைகளை பயன்படுத்தி கரையின் பிளவுகளை சரிசெய்தனர். இந்த கசிவு காரணமாக 8 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மீட்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே குறித்த இடத்திற்கு விஜயம் செய்தார்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு, பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா, 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படை கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வை செய்தனர்.