02nd September 2021 05:32:39 Hours
ராஜகிரியா கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO) வாராந்த கூட்டத்தின் மற்றொரு சுற்று இன்று (01) பிற்பகல் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் டாக்டர் அசேலா குன்வர்தன தலைமையில் நடைப்பெற்றது.
தொடக்கத்தில், ஜெனரல் சவேந்திர சில்வா தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், நாடு முழுவதும் கொவிட் -19 இன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்களை சுருக்கமாகத் தெரிவித்தார் அத்துடன் தற்போதைய தடுப்பூசி வழங்கல் திட்டம், பரவல் நிலை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால கணிப்புகள் குறித்தும் கூட்டத்தில் விளக்கினார்.
பயனுள்ள தடுப்பூசி வழங்கல் திட்டத்தைப் பற்றி விவரித்த அவர், 20-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தடுப்பூசி வழங்கல் அதிமேதகு விரைவில் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் படி விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் இவ்வருட இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய முடியும் என்றார். ஊனமுற்றோர், நோய்வாய்ப்பட்டவர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் மற்றும் நாடெங்கிலும் உள்ள முதியோர்களுக்கான பயனுள்ள நடமாடும் தடுப்பூசி வழங்கல் செயல்முறை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
இதுவரை 5 வகையான 23 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன, அவற்றில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 70% க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 21 செப்டம்பர் மாத்த்திற்குள் தடுப்பூசி வழங்கி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதேபோல், ஆடைத் தொழில் போன்ற ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் பெரும்பாலும் பணிபுரியும் சுமார் 800,000 இளைஞர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பல்கலைக்கழகப் படிப்பு போன்றவற்றிற்காக வெளிநாடு செல்வோருக்கான சிறப்பு தடுப்பூசி திட்டங்களும் நடந்து வருகின்றன. மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டாலும், செப்டம்பர் 21 க்குள் பணியை முடிக்க எதிர்பார்க்கிறோம், ”என்று ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
தொடர்ந்தும் கலந்துரையாடலில் போது திரிபு வைரஸ் தொற்று நாட்டில் ஒப்பீட்டளவில் மிக அதிகமாக உள்ளது, ஒரு நாளைக்கு சுமார் 190- 210 இறப்பு விகிதத்தை பதிவாகின்றன, இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ சங்கம்,கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் வைத்தியர்கள் மற்றும் இறுதி வருட மருத்துவ மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்படும் வீட்டிலேயே தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைமை உதவியாகவும் பயனுள்ளதாகவும் காணப்படுகின்றது, ஏனெனில் அது தடையின்றி தொடர்கிறது. கடந்த இரண்டு நாட்களில் பதிவாகியதொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாகத் தெரிகிறது. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருந்து ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான பொக்குவரத்து வசதிகளை முப்படையினர் மேற்கொள்வது தொடர்பிலும் அவர் விளக்கினார்.
இராணுவம் மற்றும் பொலிஸ் வீதித் தடைகளில் மனிதாபிமான அடிப்படையில் நியாயமான காரணங்களைக் கொண்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேலா குணவர்தனவும் இந்த நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்ட சிலரைத் தவிர, சிலரும் ஜூம் தொழில்நுட்பம் மூலம் பணிக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
கூட்டத்தின் முடிவில், அந்த பணிக்குழு உறுப்பினர்களும், இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) வருகை பிரதிநிதிக் குழுவும் இணைந்து கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் செயற்பாட்டு பிரிவின் செயல்பாட்டு அம்சத்தை உன்னிப்பாகக் கவனித்தனர். இந்த செயல்பாட்டு பிரிவு 1904 அல்லது 1906 மற்றும் பிற பொது தொலைப்பேசி எண்களில் தொற்றுநோயியல் வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள், தரவு இயக்குனர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் பிற சம்பந்தப்பட்ட ஊழியர்களை உள்ளடக்கியது. பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் தகவல் கிடைத்தவுடன் தரப்படுத்தல் செயல்பாட்டு முறைமை எவ்வாறு செயல்படுகிறது என்பதை இராணுவத் தளபதி சுருக்கமாக விளக்கினார்.