Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2021 15:00:35 Hours

டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கயருக்கு நிலை உயர்வு

டோக்கியோ பரா ஒலிம்பிக் பொட்டிகள் 2020 இல் தங்கம் வென்று வரலாற்றில் சாதனை படைத்த சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரின் பரிந்துரையின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஆக நிலை உயர்த்தப்பட்டுள்ளார்.