09th March 2024 21:08:44 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரவுன்ஸ் ஹேட்டல் மற்றும் ரிசோர்ட் இன் டொல்பின் விடுதியின் பெண் பணியாளர்களுடன் இலங்கை இராணுவத்தின் மகளிர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து சிறப்பு நிகழ்வை நடாத்தினர். நிபுணர்களால் நடாத்தப்பட்ட மார்பக மற்றும் கர்ப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு செயலமர்வுகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் பற்றிய அறிவுகளால் நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.
பெண்களுக்கான டி சொய்சா மருத்துவமனையின் இனப்பெருக்க மருத்துவத்தில் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் கயானி திசேரா (எம்பிபிஎஸ், எம்டி மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்) அவர்கள் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டார். மேலும், விக்கிரமராச்சி ஆயுர்வேத கல்லூரியின் இறுதியாண்டு மருத்துவ மாணவி செல்வி மினோன் ஹெட்டியார்ச்சி, மார்பக புற்றுநோயின் ஆயுர்வேத அம்சங்கள் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொண்டார்.
செயலமர்வுடன், டொல்பின் விடுதியின் திறமையான சமையல்காரர்கள் மற்றும் பணியாளர்கள் கேக் வடிவமைப்பில் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினர்.