Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 14:00:16 Hours

டெங்கு பரவல் தடுப்பிற்காக பனாகொடை இராணுவ வளாகத்தில் துப்பரவாக்கல் பணி

மேல் மாகாணத்தின் டெங்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முகமாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர் வெள்ளிக்கிழமை 22 ம் திகதி பனாகொடை இராணுவ வளாகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேற் கொண்டனர்.

டெங்கு தடுப்புக்கான கள உதவியாளர் பிரிவின் இரண்டு குழுக்களுடன் பனாகொடை இராணுவப் வளாகத்தில் சேவையாற்றும் 200 இற்கும் மேற்பட்ட படையினரின் பங்குபற்றுதலுடன் இந்த சுத்திகரிப்பு பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. பனகொடை இராணுவ வளாகம் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்யப்பட்டது.

மேற்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டலில் ஹோமாகம சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திலிப் லியனகே, கொழும்பு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் திரு எம் எல் பெரேரா, மேற்குப் பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிக்கேடியர் ஜி டி ஆர் யு கே கல்ஹேனகே, சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் மேற்குப் பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகள் ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.