Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

டி – 20 கிரிக்கட் போட்டிகளில் அக்‌ஷாரியன் டைகர் கழகம் சம்பியனாக தேர்வு

54 ஆவது படைப் பிரிவு மன்னார் மாவட்டத்திலுள்ள பல சிவில் விளையாட்டு கழகங்களுடன் இணைந்து உப்புக்குளம் அல்பாதா விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி டி – 20 கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றன.

சிவில் சமூகத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த விளையாட்டு போட்டியானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டிகள் கஷ்மீர் லயன்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் அக்‌ஷாரியன் விளையாட்டு கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் அக்‌ஷாரியன் டைகர் விளையாட்டு கழகமானது வெற்றியை சுவீகரித்துக் கொண்டு சம்பியனாக விளங்கியது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ ஏ ஐ ஜே பண்டார அவர்கள் வருகை தந்து சம்பியனானவர்களுக்கு 60,000/= நிதி பரிசையும், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு 30,000/= நிதி பரிசையும் வழங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் மூர்வித்தியா ஜூம்மா பள்ளியின் பிரதான மதகுரு, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவிலியன்கள் இணைந்து கொண்டனர்.bridge media | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ