Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2021 13:09:07 Hours

ஞாயிற்றுக்கிழமை (24) கொவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,429

இன்று (25) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 843 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் ஏனையவர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் அதிகளவாக கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 480 ஆகும். அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 86 பேர், களுத்துறை மாவட்டத்தில் 72 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 203 பேருக்கும் கொவிட் ஆகும் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 58,429 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 49,683 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 8,463 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான மூன்று மரணங்கள் பதிவாகியிருந்ததுடன், மருதானை, கொழும்பு, பூஜாபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே உயிரிழந்திருந்ததுனர். அதன்படி இன்று காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களிள் மொத்த எண்ணிக்கை 283 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இன்று (25) காலை 423 நோயளிகள் முழுமையாக குணமடைந்து வைத்தியசலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் இன்று காலை (25) நிலவரப்படி, முப்படையினரினால் நிர்வகிக்கப்படும் 94 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 7,812 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (24) 17,523 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. spy offers | Sneakers