Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2020 14:24:53 Hours

ஜப்பானில் இருக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என்று நெப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் நொப்கோ தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகயோரின் தலைமையில் 15 ஆம் திகதி மதியம் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

"ஒரு குழு தனிநபர்கள் நாளை (16) ஆம் திகதி ஜப்பானில் இருந்து இலங்கை விமானம் மூலம் இலங்கைக்கு வரவுள்ளனர், அவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பபடுவர் என்றும், என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சில்வா தெரிவித்தார்.

"முப்படையினரால் நிர்வகிக்கப்படும் முலங்காவில் (60), பூனானை (47), பெல் வெஹெ (50), ஒலுவில் (19), வவுனியா (179) மற்றும் கடற்படை குடும்ப தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் (56) ஆகிய தனிமைப்படுத்தல்மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 411 நபர்கள் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் இன்று (15) தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதுவரை, 15 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 9258 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 34 தனிமைப்படுத்தல் மையங்களில் 2586 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அதனடிப்படையில் இன்று 15 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 479 ஆகும். அவர்களில் 151 பேர் பிசி ஆர் பரிசோதனையின் பின்னர் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளர். வீடுகளுக்கு அனுப்ப்பட்டுள்ள கடற்படையினரை மேலும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்னர். கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மொத்தம் 328 கடற்படையினர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் "என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சுருக்கம் :

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -9258

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -: 2586

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 34 Best Authentic Sneakers | Nike