Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2020 03:58:01 Hours

ஜனாதிபதி வர்ண கம்பத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான இல்லம் கெமுனு தலைமையகத்தில் ஸ்தாபிப்பு

இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு குருவிட்டையிலுள்ள கெமுனு காலாட் படைத் தலைமையகத்தில் 1 ஆவது கெமுனு காலாட் படையணிக்கு தியதலாவையில் கிடைக்கப்பட்ட ஜனாதிபதி வர்ணம் பொறிக்கப்பட்ட கம்பத்தை தற்பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கான இல்லமொன்று நிர்மானிக்கப்பட்டு கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதியும், பொது நிருவாக பிரதானியும் இராணுவ பயிற்சி கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.எஸ் பங்ஷஜயா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

முதலாவது கெமுனு காலாட் படையணிக்கு 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி காலியிலுள்ள பொது மைதானத்தில் படையணி வர்ணம் மற்றும் ஜனாதிபதி வர்ணம் மேன்மை தங்கிய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. மீண்டும் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் ஜனாதிபதி வர்ணம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த ஜனாதிபதி வர்ண கம்பங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இல்லம் ஒன்று அமைக்கப்பட்டு இதனை 1 ஆவது கெமுனு காலாட் படையணியின் கட்டளை தளபதி லெப்டினன்ட் கேர்ணல் ஆர்.பி.சி.ஏ சமரநாயக அவர்களது அழைப்பையேற்று கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பங்ஷஜயா அவர்கள் வருகை தந்து இம் மாதம் (16) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார். Asics footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ