Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th May 2020 19:44:40 Hours

ஜனாதிபதி செயலணியினால் மற்றுமொரு விஜயம்

அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் கோவிட்-19 தொற்று நோயினை முன்னிட்டு முப்படையினரின் சுகாதார பாதுகாப்பினை பரிட்சிக்குமுகமாக, மருதானை ரைபோலி வளாகத்தில் அமைந்துள்ள 14 ஆவது விஜயபாகு காலாட் படை முகாமிற்கு வெள்ளிக்கிழமை 1 ஆம் திகதி தங்களது விஜயத்தினை மேற்கொண்டு வளாகத்தை சுற்றி பார்வையிட்டனர்.

சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட ஜனாதிபதி செயலனியின் உறுப்பினர்களான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயநாத் பெரேரா , ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன, 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.டி.பி ஹங்கிலிபொல மற்றும் சில ஜனாதிபதிசெயலணி உறப்பினர்கள் இணைந்து மேல் மாகாண ஆளுனரும், விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக தலைமையில் விஜயத்தை மேற்கொண்டனர்.

விஜயத்தினை மேற்கொண்ட உறுப்பினர்கள் முகாம் வளாகத்தின் தர மேப்பாடு தொடர்பாக கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் கட்டளை அதிகாரியவர்களும் கலந்து கொண்டார். Asics shoes | NIKE AIR HUARACHE