Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2020 19:24:53 Hours

ஜனாதிபதி செயலணியினர்களுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பாக நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் நொப்கோ தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலணி சந்திப்பானது 15 ஆம் திகதி இடம்பெற்றது.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களை முதலில் வரவேற்று இச்சந்திப்பின் நோக்கம் புதுப்பிப்புகளின் மீள்பார்வை மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பாக விளக்கமளித்தார். மேலும் பி.சி.ஆர் சோதனைகள், வெளிநாட்டினரின் வருகை, பொதுமக்களின் நல்வாழ்வுக்காக சமூகத்தின் அனைத்து பங்குதாரர்களின் செயல்பாடு தொடர்பாகவும் விளக்கினார்.

இந்த சந்திப்பின் போது ரஷ்யா மற்றும் பெலரஸ் சேர்ந்த மாணவர்களை எதிர்வரும் நாட்களில் திருப்பி அனுப்புவது குறித்தும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் வேறு நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் நொப்கோவின் ஜனாதிபதி செயலணி நிபுணர்கள் பிராந்தியத்தியத்திலும் மற்றும் ஏனைய இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றங்களுக்கு இணையாக தொற்றுநோயின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜனாதிபதி செயலணி குழுவினர்களால் வழங்கிய பெறுமதிமிக்க ஆலோசனைகளுக்கு தனது நன்றியினை தெரிவித்தார் . மேலும், பணிக்குழுக்களிடையே ஏற்கனவே நெறிப்படுத்தப்பட்ட செயல் திட்டங்களுக்கு ஏற்ப குழுவினர்களை இணைத்து சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். Running sports | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp