18th July 2021 12:00:09 Hours
கெபிதிகொல்லாவ பகுதியில் நடைபெற்ற “கிராமத்துடன் சுமூக சந்திப்பு” என்ற நிகழ்வின் போது அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் விடுக்கப்பட்ட பணிப்புரையை ஏற்று 5 வது (தொ) கஜபா படையினரால் விஹாரா மில்லேவ ரஜமஹா விகாரையின் 'சங்கவாசயா' (பிக்குகளின் குடியிருப்பு) பகுதியை மறுசீரமைப்பு செய்து புதுபித்தனர்.
மேற்படி திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைக்கமைய 623 வது படைப்பிரிவு தளபதி கேணல் ரோஹன தெகொட அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட பின்னர் 'சங்கவாசயா' கட்டிடமானது மகா சங்கத்ததின் உறுபினர்களுக்கு 20 ஜூலை 2021 அன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களினால் கையளிக்கப்பட்டதுடன், இதன்போது இடம்பெற்ற செத் பிரித் பாராயணங்களையடுத்து பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
62 வது படைப்பிரிவிலுள்ள கள பொறியியல் சேவைப் படையணினரால் மகாசங்கத்தினருக்கான தங்குமிட கட்டித்தின் கட்டுமானத்துக்கான அவசியமான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் உதவிகள் வழங்கப்பட்டன.