Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2023 20:08:23 Hours

சேவை வனிதையர் பெண்களின் தந்தையர் தின கொண்டாட்டம்

தந்தையர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை முதியோர் இல்ல முதியோர்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கு ஆடம்பரமான மதிய உணவையும் வழங்கினர்.

இச் சந்தர்ப்பத்தில் இராணுவ இசைக்குழு அங்கு வசிப்பவர்களை இசையில் மகிழ்வித்ததுடன் அவர்களின் இசை நினைவுகளை புதுப்பிக்கும் அதே வேளையில் அவர்களின் உளவியல் நல்வாழ்வையும் மேம்படுத்தியது.

அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், துப்புரவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் அந்த முதியவர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியால் வழங்கப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.