Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2020 13:30:32 Hours

சேவா வணிதா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு திறந்து வைப்பு

இலங்கை இராணுவ சேவா வணிதா பிரிவு மற்றும் தம்புள்ளுஹல்மில்லேவில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்தினால் செயற்படுத்தப்படும் பொறிமுறை காலாட் படையணி சேவா வணிதா பிரிவின் அனுசரணையினால் 2015 ஆம் ஆண்டு விபத்தில் பழியான பொறிமுறை காலாட் படையணியின் இராணுவ வீரரின் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்டது.

மிஹிந்தலையில் புதிதாக நிர்மாணிக்கப்ட்ட இவ் வீடானது பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து அவர்களினால் வியாழக்கிழமை 30 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் வீட்டின் திறப்புகளும் கையளிக்கப்பட்டன.

2ஆவது பொறிமுறை காலாட் படையணியின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் இவ் புதிய வீடானது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பொறிமுறை காலாட் படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் எஸ்.ஜே. பிரியதர்சன, பொறிமுறை காலாட் படையணியின் பிரதி கட்டளைத் தளபதி லெப்டினன் கேணல் கே.கே.எஸ்.பெராகும் , 2ஆவது பொறிமுறை காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டின்ன் கேணல் பி.ஐ. புஞ்ஜிஹேவா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் இத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர். jordan release date | Entrainement Nike