20th July 2021 19:31:46 Hours
பிராந்தியத்தில் சேதன பசளை உற்பத்தி செயல்முறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை செயல்படுத்தும் திட்டத்தை பனாலுவ முதலாவது பொது சேவை படையினர் சமீபத்தில் தொடங்கினர்.
பனாலுவ முதலாவது பொது சேவை படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஹந்துண்முல்ல மற்றும் முதலாவது பொது சேவை படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.எஸ் தெமுனி ஆகியோரின் வழிக்காட்டலில் முதலாவது பொது சேவை படையின் பனாலுவ குழு பொறுப்பதிகாரி கேப்டன் எச்.ஜே.சி.குமார இந்த திட்டத்தை ஒருங்கிணைத்தார்.
பனாலுவ உற்பத்தித் திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றதுடன் உள்ளூர் விவசாயிகளுக்கு தங்களது சொந்த சேதன பசளை உற்பத்தி செய்வதற்கு தொழில்நுட்ப உதவியை வழங்குவதன் மூலம் இப்பகுதியில் சேதன பசளையின் நன்மைகள் குறித்த சமூக விழிப்புணர்வை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.