Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2021 10:30:26 Hours

சேதன பசளை உற்பத்தி தொடர்பில் யாழ். படைகளுக்கு பயிற்சி செயலமர்வு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் அறிவுரைக்கமைய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினருக்கு சேதன பசளை உற்பத்தி தொடர்பிலான பயிற்சி செயலமர்வொன்று திங்கட்கிழமை (28) நடத்தப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் தலைமையில் தோட்டக்கலை நிபுணர் திரு கோலித விக்ரமசிங்க மற்றும் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பலர் சேதன பசளை உற்பத்தியின் தேசிய திட்டத்தின் சாத்தியக்கூறுகள் தொடர்பாக விரிவுரையை நிகழ்த்தினார்.

இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்படும் ‘துரு மித்துரு நவ ரட்டக் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில் படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் படையணி அலகுகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.