Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2019 15:35:02 Hours

செப்டெம்பர் மாதம் இடம் பெறவுள்ள நீர்காகம் X - 2019 கூட்டுப் படை பயிற்சி

இலங்கை இராணுவத்தால் பத்தாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு முப்படையினரின் பங்களிப்போடு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி நடைபெறவிருக்கும் நடவடிக்கை நீர் காகம்’ கூட்டுப் படை பயிற்சியானது வெளிநாட்டு படை வீரர்கள் 100 படையினர் இலங்கை இராணுவத்தின் 2400 படையினர், கடற்படையின் 400 படையினர் மற்றும் விமானப் படையின் 200 படையினர் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான ஊடக சந்திப்பானது இன்று மாலை (26) கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம் பெற்றது.

இவ் ஊடக சந்திப்பில் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கூட்டுப்; படை நடடிவக்கைப் பயிற்சி போன்றன இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் விபரிக்கப்பட்டதோடு இச் சந்திப்பில் இராணுவ பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே இராணுவ பொது நிறுவாக பிரதானியான மேஜர் ஜெனரல் ஏ எம் ஆர் தர்மசிறி பயிற்சிப் பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சுராச் பங்சகயா இராணுவ ஊடக பணிப்பாரளான பிரிகேடியர் சுமித் அதபத்து கொமாண்டோ படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் கே ஏ சமரசிறி விசேட படைப் பிரிவு தலைமையத்தின் தளபதியான கேர்ணல் ஜெ பி சி பீரிஸ் குழுத் தலைவரான தினேஷ் ஜயவீர மற்றும் கடற் படை உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் இவ் ஊடக சந்திப்பில் இக் கூட்டுப் படை பயிற்சி தொடர்பான விளக்கத்தை மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் வழங்கினார்.

அத்துடன் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இக் கூட்டுப் படை பயிற்சியின் மூலம் புதிய விடயங்கள் மற்றும் சிறந்த அனுபவங்களை கற்றுக் கொள்ளக் கூடியதாக தெரிவித்த தளபதியவர்கள் 201910ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம் பெறவுள்ள இப் பயிற்சி தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த தளபதியவர்களின் விரிவாக்கல் கருத்து பின்வருமாறு

எதிர்கால சங்கதியினருக்கு வெளிநாட்டு இராணுவ அங்கத்தவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த அப்பியாச பயிற்சிகள் நல்ல அனுபவங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நிறைவடைய இருக்கும் இந்த அப்பியாச பயிற்சிகள், வேண்டிய அவசர காலகட்டத்தில் படையினர் கூட்டாக இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள கூடிய நோக்கத்தில் இந்த நடவடிக்கை நீர்காகம் அப்பியாச பயிற்சிகள் கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

21 ஆவது நூற்றாண்டில் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு எச்சரிக்கையின் போது அரச விரோதி மற்றும் தீவிரவாத சவால்களுக்கு முகமளிப்பது தொடர்பாக இம்முறை இந்த அப்பியாச பயிற்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பயிற்சியில் அடிப்படை ரீதியாக திட்டமிடல், முன் ஒத்திகை, தொழில் நுட்ப பாவனை, தெளிவு படுத்தும் கட்டளை, நிர்வாகம், போர் தந்திர உபாயம், பணி நடவடிக்கை தொடர்பான விஷேட செயற்பாடுகள் இந்த அப்பியாச பயிற்சிகளின் மூலம் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த அப்பியாச பயிற்சியானது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கூட்டு நடவடிக்கை பயற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ளது. .

மின்னேரியவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை தலைமையகத்திலிருந்து இந்த அப்பியாச பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

விஷேட நடவடிக்கை இராணுவ தந்திர உபாயம் மேற்கொள்ளும் இந்த அப்பியாச பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையணி, விஷேட படையணி, எயார் மொபைல் படையணி, பொறிமுறை காலாட் படையணி, கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மலேசியா, மாலைதீவு, நேபாளம், ரஷியா, அமெரிக்கா, பங்களாதேஷம், சீனா, பிரான்ஷ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஜக்கிய இராஜ்ஜியம் மற்றும் சிம்பாவையைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவத்தினர் இந்த அப்பியாச பயிற்சியில் பங்கேற்றவுள்ளனர்.

உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பை தோற்கடித்த இலங்கை இராணுவம் அதன் போர்க்கள ஆதாயங்களுடன் தொடர்புடைய நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முடியுமென்றும், இலங்கை இராணுவம் நாட்டில் ஏற்படும் வேண்டிய சவால்களுக்கு முகமளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதென்பது இராணுவ தளபதியின் கருத்தாகும். (நிறைவு)Sport media | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival