01st January 2020 16:20:29 Hours
213 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 2 ஆவது மின்சார பொறிமுறை காலாட் படையணியினால் மதவாச்சி மன்னார் A14 சோதனை சாவடியில் கடந்த டிசம்பர் மாதம் (30) ஆம் திகதி காலை 9.30 மணிக்கு 10 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க போதைப் பொருள் பொதியொன்று மன்னாரிலிருந்து கொழும்பு வரை பயணித்த தனியார் பஸ் வண்டியிலிருந்து மீட்கப்பட்டன.
பஸ் வண்டியிலிருந்த சாரதி, டிக்கட் காப்பாளர் மற்றும் இன்னொரு நபரான மூவரும் 10 ஆவது பொறிமுறை காலாட் படையணியின் படை வீரரினால் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸாருக்கு இந்த மூவரும் கையளிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports News | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals