17th December 2024 18:08:14 Hours
இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தலைவர் திரு. ஒலிவியர் ப்ராஸ் அவர்கள் 16 டிசம்பர் 2024 அன்று யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார்.
முதலாம் படைத் தளபதியும் பதில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தூதுவரை மரியாதையுடன் வரவேற்றதுடன், சமூக உறவுகள் திட்டங்கள், இராணுவம் பாதுகாப்பு, மற்றும் பொது பணிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
சந்திப்பின் முடிவில், நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன, மேலும் திரு. ஒலிவியர் ப்ராஸ் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக்களைப் பதிவிட்டார். இந்த சந்திப்பின் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரிகளும் உடனிருந்தனர்.