11th July 2021 18:04:17 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 121வது பிரிகேட் மற்றும் 12 வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 18 வது கெமுனு ஹேவா படைப்பிரிவின் படையினரால் வியாழக்கிழமை (8) கெபிலித்த - மொனராகலை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா செய்கை அழிக்கப்பட்டது.
சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத கஞ்சா செய்கை மறைவான முறையில் வனப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுடன் அவற்றை அழிக்கும் பணிகளை முன்னெடுத்த படையினரால் மீட்கப்பட்ட 200 கிலோ உலர்ந்த கஞ்சாவும் அவ்விடத்திலேயே அழிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு, தனமல்வில மற்றும் அம்பகமுவ பகுதிகளிலும் கஞ்சா செய்கைகளை படையினர் அழித்தனர்.
12 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்க தனது சிப்பாய்களை மேற்படி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார்.