Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2021 12:41:32 Hours

சுற்றுலாத்துறைக்கான இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புக்கு முதுகலை டிப்ளோமா மாணவர்கள் பாராட்டு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுற்றுலா பாடத்திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் சுற்றுலா பொருளாதாரம் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தில் முதுகலை பட்டப்பின் படிப்பு டிப்ளோமா மாணவர்களால் யால பலபட்டுனவிலுள்ள லாயா ஸபாரி ஹோட்டலின் நிர்வாகச் செயற்பாடுகளையிட்டு அதன் தலைமை நிறைவேற்று அதிகாரியான பிரிகேடியர் லலித் ஹேவா அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

சர்வதேச சுற்றுலா தலைவர்களின் உச்சிமாநாடு மற்றும் சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு ஆகிய உள்நாட்டு வெளிநாட்டு மட்ட நிகழ்வுகளுக்கு வழங்கிய தொடர்ச்சியான பங்களிப்புக்கும் அவரது அண்மைய பிரிகேடியர் நிலை உயர்வுக்காவும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பிரிகேடியர் லலித் ஹேவா இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பீடத்தின் பேராசிரியர் சுரங்க சில்வா கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் சார்பாக உலகலாவிய சுற்றுலாத்துறைக்கு இலங்கை இராணுவ வீரராக உயர் தர வீரராக அவரது பங்களிப்புக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பாராட்டு விழாவின் நிறைவில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் எண்ணங்களை பகிர்ந்துக்கொண்டதுடன், பிரிகேடியர் லலித் ஜயசிங்க சேவைகளை பாராட்டும் வகையில் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்ததுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைமை பேராசிரியர் டபிள்யூ. வண.விமலரத்ன தேரர் உட்பட 100 க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். அத்துடன் சுற்றுலா தலைவர்களின் உச்சிமாநாடு மற்றும் சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டின் கல்வி ஆலோசகர் மற்றும் அண்மையில் துறைசார் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். latest jordan Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf