13th December 2021 13:52:00 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 வது படைப் பிரிவின் 231 வது பிரிகேடின் சிப்பாய்கள் CERI நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளருடன் இணைந்து கல்லடியிலிருந்து காத்தான்குடி வரையிலான 4 கிலோமீற்றர் நீளமான கரையோர பகுதிகளில் சனிக்கிழமை (11) தூய்மையாக்கல் பணிகளை மேற்கொண்டனர்.
231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எம்.என்.கே.டி.பண்டார அவர்களால் CERI அமைப்பின் திரு. E. தர்ஷன் விஜயரத்தினம் அவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக பணி 6 அதிகாரிகள், 30 கடற்படை வீரர்கள், 46 பொலிஸார், தேசிய மாணவ சிப்பாயினை சேர்ந்த 17 உறுப்பினர்கள் மற்றும் 40 இராணுவத்தினர் மற்றும் 10 பிரதேசவாசிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றன.
அனைத்து பங்கேற்பாளர்களும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் திருப்தியுடன் சில மணிநேரங்களில் திட்டத்தை நிறைவு செய்தனர்.