Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சிப் படையினர் சிரமதானப் பணிகளில் ஈடுபாடு

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு (பெப் - 4) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது 65ஆவது மற்றும் 66ஆவது படைப் பிரிவுகளில் பலவாறான சமூக நலன்புரிச் சேவைகள் கடந்த சனிக் கிழமை (3) முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் 57ஆவது படைப் பிரிவின் 500ற்கும் மேற்பட்ட படையினர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகம் மற்றும் நோயாளர் வாட்டுகளை சுத்தப்படும் பணிகளை மேற்கொண்டனர்.

அதே வேளை இவ் வாட்டுகளில் உள்ள நோயாளர்களுக்கான பழ வகைகள் போன்றனவும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் அன்றய தினமே (3) 66ஆவது படைப் பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் தேவையைக் கருத்தி இப் படைப் பிரிவில் இரத்த தான நிகழ்விவு இடம் பெற்றது.

இதன் போது இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களாக 58 படையினர் இரத்த தானத்தை வழங்கியுள்ளனர்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கி வைத்ததுடன் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முலங்காவில் அக்கராயன்குளம் மற்றும் மல்லாவி போன்ற அரச வைத்தியசாலைகளின் சுத்திகரிப்பு பணிகளை 65ஆவது படையினர் கடந்த சனிக் கிழமை (3) மேற்கொண்டனர்.

மேலும் 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்கள் இத் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பை வைத்தியசாலைப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் 65ஆவது படைப் பிரிவின் பாரிய அளவிலான படையினர் வைத்தியசாலை வளாகங்களை திறம்பட சுத்திகரித்து ஓர் அழகிய சுத்தமான சூழலை அமைத்துள்ளனர்.

இப் பணிகளின் இறுதியில் வைத்தியசாலை நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகளுக்கான மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி வைத்துள்ளனர்.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66ஆவது படை பிரிவினரால் பூனகிரி கிளிநொச்சி உரதிபுரம் மற்றும் வரவில் வைத்தியசாலைகளில் சிரமதானப் பணிகள் சனிக் கிழமை (3) மேற்கொண்டனர்.

அந்த வகையில் 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன அவர்களின் கண்காணிப்பின் கீழ் இச் சிரமதானப் பணிகள் சிவில் சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தையூம் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது வைத்தியசாலையில் ஊழியர்கள் மற்றும் நோயர்கள் போன்றோரிற் சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டன.

அந்த வகையில் வைத்தியசாலை வளாகமானது மிகவூம் அழகிய முறையில் சுத்தப்படுத்தப்பட்டு காணப்பட்டது.

இப் பணிகளில் 66ஆவது படைப் பிரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் 300 படையினர் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும் இப் பணிகள் இனிதே கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

Running Sneakers Store | NIKE AIR HUARACHE