Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2022 19:00:22 Hours

சீரற்ற வானிலை காரமாக சிக்குன்ட பொதுமக்களை இராணுவத்தினர் வெளியேற்றம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மலையகத்தில் சேவையில் ஈடுபடும் பாதுகாப்பு படையினர், 24 மணித்தியாலங்களில் செவ்வாய்க்கிழமை (2), சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு, போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்குண்ட பல பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.

முதலாவது படையின் 58 வது படைப்பிரிவின் 581 வது பிரிகேடின் கீழுள்ள 5 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் நாவலப்பிட்டி, வெல்கம்பொல பொதுப் பகுதியில் (1) மாலை பெய்த அடை மழையின் காரணமாக மண்சரிவில் சிக்கியிருந்த 16 பொதுமக்களை மீட்டுள்ளனர்.(முகப்புப் பக்கத்தில் தனித்தனி செய்தியைப் பார்க்கவும்)

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 11 வது படைப்பிரிவின் 111 வது பிரிகேடின் கீழுள்ள 1 வது இலங்கை இராணுவ துவக்கு படையணியின் படையினர், கித்துல்கொட பொதுமகாவலி ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இடம்பெயர்ந்த சுமார் 50 குடும்பங்களை மீள்குடியமர்த்த அனர்த்த உதவி முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் ஏனைய சிவில் நிறுவனங்களுக்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

அதேபோன்று, சிவில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 111 வது பிரிகேடின் கீழுள்ள 19 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர், நுவரெலியா மாவட்டத்தின் பகதுலுவ மக்கள் வசிக்கும் பகுதியில் ஆற்று நீர் புகுந்த காரணத்தினால் அங்கு வசிக்கும் 75 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.

இராணுவத்தினர் படகுகளின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு கொண்டு சென்றதுடன், அங்கு முதலாவது படையின் 58 வது படைப்பிரிவின் கீழ் 581 வது பிரிகேடின் கட்டளையின் கீழுள்ள 5 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் இரவும் பகலும் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், (1) மாலை நாவலப்பிட்டி, தியகல - விதுலிபுர பிரதேசத்தை தாக்கிய நீர்நிலைகளில் காணாமல் போன ஒருவரை தேடும் பணியில், 111 வது பிரிகேடின் 19 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் ஈடுபட்டனர். தேடுதல் நடவடிக்கையின் பின்னர், காணாமல் போன நபரின் சடலத்தை படையினர் மீட்டு, நாவலப்பிட்டி வைத்தியசாலை மற்றும் பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைத்தனர்.

இதேவேளை, 111 வது பிரிகேடின் 19 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் கினிகத்தேன, மாதெனிய பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 4 வயது சிறுவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.