Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2024 19:45:51 Hours

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட க.பொ.த (உ/த) மாணவர்களுக்கு இராணுவம் உதவி

நாடு முழுவதிலும் நிலவும் சீரற்ற காலநிலைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், க.பொ.த (உ/த) பரிட்சைக்கு செல்லும் மாணவர்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு படையினரை நிலை நிறுத்தியுள்ளது. உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு சென்றடைய பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலநிலை காரணமாக போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவுவதற்காக டிரக் மற்றும் யூனி-பபல் வாகனங்களுடன் இராணுவத்தினர் தியகொட, மாலிம்பட, அத்துரலிய, அக்குரஸ்ஸ மற்றும் கம்புருப்பிட்டிய கொடவா விகாரை போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், சீரற்ற காலநிலையில் ஏற்படக்கூடிய அவசரகால நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்காக மாத்தறை, யட்டியான மற்றும் வாரியபொல ஆகிய இடங்களில் இராணுவத்தினர் டிரக்குகள் மற்றும் யூனி-பபல் வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இராணுவத் தளபதி, 1 ம் படைத் தளபதி மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளையும் தயார் நிலையில் இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட வேறு பகுதிகளுக்கு நிவாரண நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.