Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2021 10:12:12 Hours

சீன இராணுவத்தால் இலங்கை ஆயுதப் படைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் விமான நிலையத்தை வந்தடைந்தன

சீன இராணுவத்தால் இலங்கை ஆயுதப் படைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் மற்றும் இலங்கையர்களுக்கான மேலும் 2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் இன்று (28) காலை இலங்கை வந்தடைந்தன.

குறித்த தொகை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் சீன பாதுகாப்பு இணைப்பு அதிகாரி மூத்த கேணல் வான் டொங் உள்ளிட்ட சீன தூதரக அதிகாரிகள் ஆகியோர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்தனர்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் சார்பாக, சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் வான் டொங் அவர்கள் இலங்கை ஆயுதப்படைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்(ஓய்வு)கமால் குணரத்ன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக இந்த தொகையானது இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன முன்னிலையில் வழங்கப்பட்டது.

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்த பங்குகளை விமானத்தில் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இந்த நிகழ்வில் பல அரச அதிகாரிகள் விமான நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.