15th July 2021 18:45:13 Hours
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளராக நாயகமாக நியமனம் பெற்றுக்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவா அவர்கள் இராணுவ தலைமையகத்தில் வைத்து இன்று (15) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவ சேவையிலிருந்த மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா அவர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளராக நாயகமாக பெறுப்பேற்கும் முன்பாக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக சேவையாற்றி வந்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்ளுடனான சந்திப்பின் போது புதிய நியமனத்திற்காக வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதுடன், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தளபதி முன்பு வகித்த பதவிகளின் போதான சேவைகள் தொடர்பில் தளபதி நம்பிக்கை தெரிவித்தோடு, நாட்டு மக்களின் நலனுக்கான முன்னெடுத்த செயற்பாடுகளையும் நினைவுகூர்ந்தார்.
அதனையடுத்து சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் இராணுவ தளபதிக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறிக்கொண்டதுடன், இராணுவ தளபதிக்கு சிறப்பு நினைவு பரிசொன்றையும் வழங்கினார்.