Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2019 15:15:13 Hours

சிவில் குழுவினருடன் இணைந்து கிளிநொச்சி கால்பந்து போட்டிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீ;ழ் இயங்கும் 652 ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் சவாலுக்கான கால்பந்து விளையாட்டு போட்டியானது கடந்த (26) ஆம் திகதி செவ்வாய்கிழமை இப் படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இப் போட்டி நிகழ்வானது சிவில் மற்றும் இராணுவ கால்பந்து விளையாட்டு குழுவினர்களின் பங்களிப்போடு இடம் பெற்றதுடன் போட்டி நிகழ்விற்கு பிரதான அதிதியாக 65 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரபெரும அவர்கள் கலந்து கொண்டார்.

இப் போட்டியில் இராணுவத்தில் 20 கால்பந்து விளையாட்டு குழுவினர் போட்டியிட்டதுடன் இறுதி போட்டிக்கு 1ஆவது கஜபா படையணி குழுவினர் மற்றும் 9ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியும் தேர்ந்தொடுக்கப்பட்டன. அதன்போது 5-3 என்ற புள்ளி கணக்கில் 1ஆவது கஜபா படையணி கால்பந்து விளையாட்டு குழுவினர் வெற்றிப்பெற்றன.

அதேபோல் இப் பிரதேசத்தில் சிவில் 3 கால்பந்து விளையாட்டு குழுவினர்கள் பங்குபற்றியதுடன் கணகபுரம் விளையாட்டு கழகம் மற்றும் வட்டகச்சி இளன்கலேயர் விளையாட்டு கழகம் இறுதி போட்டியில் போட்டியிட்டது. அதன்போது 2-1 என்ற புள்ளி கணக்கில் வட்டகச்சி இளன்கலேயர் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது. இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் சான்றிதல்கள் வழங்க 65 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மற்றும் 66 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதிகள் கலந்து கொண்டன. latest jordans | Klær Nike