Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2021 09:57:44 Hours

சிவனொளிபாத மலைக்கான ஆரம்ப பருவகால யாத்திரைகளில் படையினரும் இணைவு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேடின் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் உந்துவப் போயா தினத்தன்று (18) சிவனொளிபாத மலைக்கான வருடாந்த யாத்திரைகளின் ஆரம்ப பருவ கால நிகழ்வுகளில் இணைந்துகொள்ளும் முகமாக கடவுளை அலங்கரிப்பதற்கான நகைத் தொகுதியை நல்லத்தண்ணியில் இருந்து சுமந்துச் சென்றனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்க ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் இந்த சமயப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த மூன்று தசாப்த காலங்களாக சிவனொலிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்கான பருவ காலம் ஆரம்பிக்கும் காலங்களில் அங்குள்ள புனித பௌத்த தளத்திற்கு ஆபரணங்களை எடுத்துச் செல்லும் தொண்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.