02nd October 2023 23:29:27 Hours
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 243 காலாட் பிரிகேட் படையினர் மட்டக்களப்பு நகர பிள்ளைகளுக்கான வண்ணமயமான கொண்டாட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 1) மட்டக்களப்பு கலங்கரை விளக்கு வளாகத்தில் ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்வில் அனைத்து இன மற்றும் மதங்களைச் சேர்ந்த 150 சிறுவர்கள் விளையாட்டுக்களிலும் பொழுதுபோக்கிலும் கலந்து கொண்டனர். 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையினர் இசை நிகழ்ச்சியை நடாத்தியதுடன், நிகழ்வின் இறுதியில் சிற்றுண்டிகள், மதிய உணவு மற்றும் ஒவ்வொருவருக்கும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
திரு ஹேமகுமார குணசேகர மற்றும் திருமதி திலினி விதானகே ஆகியோர் இந்நிகழ்ச்சிக்காக ரூபாய் 150,000.00 யை அனுசரணையாக வழங்கினர்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி, மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஎம்சி குமாரசிங்க, மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு உதவினர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 243 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.