01st October 2021 18:00:46 Hours
ஐ.நா. தூதரகத்தின் 7 வது படைப்பிரிவின் கீழ் தென் சூடானில் சேவையாற்றும் படையினருக்கான விருது வழங்கும் நிகழ்வுகள் 23 செப்டம்பர் 2021 தென் சூடானை தளமாக கொண்ட கிழக்கு படைத் தலைமையகத்தின் வைத்தியசாலை வளாகத்தில் ஐநா அமைதி காக்கும் படைகளின் துணைப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மெய்ன் உல்லா சவுத்ரி அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
இதன்போது பிரதம விருந்தினருக்கு சிறிமெட் தரம் 2 வைத்தியசாலையின் தளபதி கேணல் டி.ஆர்.எஸ்.ஏ. ஜயமான்ன அவர்களினால் பிரதான வாயில் வளாகத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. நீண்டகால உலக அமைதிக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த அனைத்து அமைதிப்படை வீரர்களுக்குமான நினைவு தூபிக்கு பிரதம விருந்தினரால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து மூன்று அதிகாரிகள் மற்றும் 26 அதிகார ஆணையற்ற அதிகாரிகள் ஆகியோரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
மேற்படி அணிவகுப்புக்கு மரியாதைக்கு சிறிமெட் நிலை 2 வைத்தியசாலையின் தலைமை வழங்கல் அதிகாரியான மேஜர் டிஎல்பி கஹவந்த அவர்களினால் கட்டளையிடப்பட்டது. குழு கட்டளை அதிகாரிகாக மேஜர் ஜேஜி பிரதீப் குமார மற்றும் கெப்டன் எல்.பி. ஹீனடிகல கடமையாற்றியதுடன் அதிகார ஆணையற்ற அதிகாரி I ஐஆர்எச்கேஎச் அமரசூரிய மற்றும் அதிகார ஆணையற்ற அதிகாரி II எஸ்பீடபிள்யூ பிரேமச்சந்திர ஆகியோர் அணிவகுப்பு பயிற்றுநர்களாக செயற்பட்டனர்.
கள அலுவலகத்தின் தளபதி இசிடோர் புடேட்சு, பிரதி களத் தளபதி கேணல் ஹெப்பி ருவுஷா மற்றும் கள நிர்வாக அலுவலகப் பிரதிநிதி திரு. எப்ராம் ஆராயா ஆகியோர், பிரதம விருந்தினருடன் இணைந்து வலுவான சிறிமெட் குழு 66 உறுப்பினர்களுக்கு பதக்கங்களை வழங்கினர்.
பிரதம விருந்தினரின் உரையின் போது, உயிர்கொல்லி கொவிட் -19 தொற்றுநோய் பரவல் காலத்தில் தென் சூடான் பகுதி முழுவதிலும் சிறிமெட் தரம் 2 வைத்தியசாலை குழுவினரின் அர்பணிப்பான செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ஐ.நா அமைதிகாக்கும் படைகளுக்கான பொதுச் செயலாளர் (SRSG) சிறப்புப் பிரதிநிதி திரு. நிக்கோலஸ் ஹேசோம் மற்றும் ஐ.நா அமைதிகாக்கும் படைகளுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் தினகரின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.
அதனையடுத்து பதக்கம் வழங்கும் நிகழ்வை வண்ணமயமாக்கும் விதமாக சிறிமெட் நிலை 2 வைத்தியசாலை உறுப்பினர்களால் கலாசார நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்வுகள மேஜர் கேஎம்ஸ்டீ குலதுங்க மற்றும் அதிகார ஆணையற்ற அதிகாரி டபிள்யூஏஆர் லக்ஷிகா ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டது. பின்னர் பிரதமர விருந்தினர் தனது நன்றிகளை கூறிக்கொண்டதோடு நினைவுக் குறிப்பேட்டிலும் எண்ணங்களை பதிவிட்டார். இறுதியாக சகலருக்குமான தேநீர் விருந்துபசாரம் ஒன்றும் வழங்கப்பட்டது.