Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2022 18:58:11 Hours

சிரேஷ்ட அதிகாரியின் சொந்த நிதியில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

541 வது பிரிகேட் தளபதி தனது சொந்த நிதியில் இலுப்பகடவை, அந்தோணிபுரம், முண்டம்பிட்டி, கோவில்குளம் மற்றும் மன்னார் பகுதிகளின் அரச தமிழ் கலவன் பாடசாலைகளின் குறைந்த வருமானம் பெறும் 100 மாணவர்களின் தேவைகளுக்காக இராணுவத்தின் மனிதாபிமான செயலாக, அண்மையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

541 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்கள் வறிய குடும்பங்களில் உள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளின் வாழ்க்கை இன்னல்கள் மற்றும் கஷ்டங்களை நேரில் கண்டதன் மூலம் அந்தந்த பிரதேசங்களில் உள்ள சமூகத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்திற்கு தானாக அனுசரணை வழங்க முன்வந்தார்.

அதன்படி, மன்னார் மாவட்டத்தின் இலுப்பகடவாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, அந்தோணிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, முண்டம்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கூரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கல்லியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,, கோவில்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, அலிகார் முஸ்லிம் வித்தியாலயம், ஜோசப் வாஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒரே நேரத்தில் அந்த நன்கொடையை பெற்றுக்கொண்டனர்.

இவ் விநியோக திட்டமானது 12 (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினரால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன், இச் சமூகம் சார்ந்த திட்டத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், எழுதுபொருட்கள், பேனா உட்பட பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டது.

இத்திட்டத்திறகு இப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இராணுவத்தின் இந்த செயலை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடதக்கமானது.