Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th August 2021 19:00:09 Hours

சிப்புக்குளம் மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் ஓய்வுபெற்ற போர் வீரர்களுக்கான மேலும் இரு வீடுகள் வழங்கி வைப்பு

ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு பெற்ற மற்றுமொரு போர்வீரனுக்காக நிர்மாணிக்கப்பட்ட 3 வது புதிய வீட்டின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அனுராதபுரம் சிப்புக்குளத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற 2 வது விஷேட படையின் பணிநிலை அதிகாரியான ஜேடபிள்யூபீ திசாநாயக்க 2008 இல் வெலிஓயாவில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டபோது அதனை அணைப்பதற்கான அவர் செய்த பங்களிப்புக்கும் தளபதி பாராட்டு தெரிவித்தார். அத்தோடு பயனாளியின் குடும்பத்தாருடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். பின்னர் இடம்பெற்ற மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பயனாளிக்கான வீட்டை வழங்கி வைத்த பிரதம விருந்தினர் வீட்டின் பெயர் பலகையை திறந்து வைத்த பின்னர் ரிப்பன் வெட்டி வீட்டை திறந்து வைப்பதற்காக பயனாளியின் பிள்ளைகளுக்கு அழைப்பு விடுத்ததோடு, திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் இணைந்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வைத்தார்.

விஷேட படையின் படைத் தளபதி மற்றும் நிலையத் தளபதி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 2 வது விஷேட படை சிப்பாய்களால் மேற்படி வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்ததோடு, படையினர் விவகார பணிப்பகம் மற்றும் விஷேட படைத் தலைமையகத்தின் 1.5 மில்லியன் ரூபாய் நிதி உதவியின் கீ்ழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் மெதிரிகிரிய, ஹிங்குரகொடவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டைத் திறப்பதற்கான இறுதி கட்ட நிகழ்வில் கஜபா படையணியின் படைத் தளபதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா பௌத்த வழிபாட்டு நிகழ்வுகளுக்கு மத்தியில் புதிய வீட்டின் சாவியை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். கஜபா படையணியின் சிப்பாய்களால் தங்களது ஓய்வுபெற்ற போர் வீரரான கஜபா படையின் டபிள்யூகேஜீ விஜித குமார அவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை திறப்பதற்கான பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

சிரேஸ்ட அதிகாரிகள், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் நிர்மாண பணிகளுக்கு பங்களிப்பு செய்தவர்கள், பயனாளியின் குடும்பத்தார் , உறவினர்கள் மற்றும் படையினர் ஆகியோர் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர்.