Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2023 11:52:47 Hours

சிப்பாய்களுக்கான கேள்வி-பதில் போட்டியில் போட்டியிட்டவர்களுக்கு பணப்பரிசு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வழங்கிய ஆலோசனையின் படி இராணுவத்தினரின் பொது அறிவைமேம்படுத்தும் நோக்கத்துடன், நிறைவேற்று பணிப்பாளர் கிளையினால் சிப்பாய்களுக்கான கேள்வி-பதில் போட்டி வியாழக்கிழமை (5) இராணுவ தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.

பிரதம விருந்தினராக இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்கள் போட்டியினை பார்வையிட்டார். இப் போட்டிக்கு 125 சிப்பாய்கள் விண்ணப்பித்திருந்ததுடன், எழுத்துத் பரீட்சை மூலம் 30 சிப்பாய்கள் கேள்வி-பதில் அமர்வின் முதல் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 30 போட்டியாளர்களில், பல படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 21 இராணுவ வீரர்கள் கேள்வி பதில் 1 வது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 21 பேரில் இறுதிச்சுற்றுக்கு 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போட்டி ஆளனி நிர்வாக பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போட்டியில் இராணுவ அறிவு, நடப்பு விவகாரங்கள், ஆயுதங்கள் பற்றிய அறிவு, இலங்கையின் புவியியல், இலங்கையின் வரலாறு, இராணுவ அமைப்பு பற்றிய அறிவு, இராணுவச் சட்டம், ஆடை விதிமுறைகள், ஆங்கில அறிவு, இசை, சொற்களஞ்சியம் மற்றும் பல துறைகள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.

போட்டியாளர்களில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ்களையும் ஊக்கத் தொகையையும் பின்வரும் முறையே வழங்கப்படவுள்ளன. முதல் இடத்திற்கு ரூ. 50,000/-, இரண்டாம் இடத்திற்கு ரூ.40,000/-, 3 வது இடத்திற்கு ரூ. 30,000/-, 4 வது இடத்திற்கு ரூ. 25,000, 5 வது இடத்துக்கு 20,000/- ரூபாவும் 09 ஒக்டோபர் 2023 அன்று இரவு உணவின் போது பெற்றுக் கொள்வர்.

ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி, இலங்கை பீரங்கி படையிணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பி.ஜி.எஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ, இலங்கை சிங்கப் படையிணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சி.எஸ் திப்பொடுகே, இலங்கை மருத்துவப் படையிணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டபிள்யூ.ஏ.வி.எஸ். வனசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, விஜயபாகு காலாட் படையணியின் நிலைய தளபதி கேணல் எம்.ஏ.டி.ஜே.டி குணதிலக ஆர்எஸ்பி யுஎஸ்பீ, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி கேணல் எல்.எச்.சி.ஆர். சிரிவர்தன ஆர்எஸ்பீ மற்றும் இலங்கை இராணுவ முன்னோடி படையணியின் நிலைய தளபதி கேணல் ஜே.கே.என்.எஸ் ஜயசிங்க கேஎஸ்பீ ஆகியோரின் தீவிர மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.