Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2024 17:06:03 Hours

சிப்பாய்களிடையே நேர்மறை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை வளர்த்தல்

‘புத்துணர்ச்சியூட்டும் இராணுவ வாழ்வு’ எனும் தொனிப்பொருளில் விரிவுரை விசேட மனநல மருத்துவர் பிரிகேடியர் ஆர்.எம்.எம். மொனராகலை யூஎஸ்பீ அவர்களின் தலைமையில் இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சேவை பணிப்பகத்தின் விரிவுரையாளர்கள் குழுவினால் 61 வது காலாட் படைப்பிரிவு விரிவுரை மண்டபத்தில் புதன்கிழமை (ஜனவரி 10) நடாத்தப்பட்டது.

படைவீரர்களின் நேர்மறை எண்ணத்தை மேம்படுத்துவதும் அவர்களின் இராணுவ அனுபவங்களை புத்துயிர் அளிப்பதும் இதன் நோக்கமாக இருந்தது. 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி இந்த விரிவுரையை மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கியதுடன் 08 அதிகாரிகள் மற்றும் 169 சிப்பாய்கள் இந்த அமர்வில் பங்கேற்றனர்.