Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th April 2023 19:27:42 Hours

சிங்கப் படையணி தலைமையகத்தின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

இலங்கை சிங்கப் படையணி 8 ஏப்ரல் 2023 அன்று அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுடன் இணைந்து அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் 'பக்மஹா உலேல' (சிங்கள,தமிழ் புத்தாண்டு) நிகழ்வை கொண்டாடியது.

அன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியும், உபகரண பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் இலங்கை சிங்கப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன உடன் கலந்துகொண்டார்.

சிங்க பக்மஹா உலேல நிகழ்வில் மரதன் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், முட்டி உடைத்தல், பலூன் உடைத்தல், மறைந்திருந்த பிரமுகரை கண்டுபிடித்தல், தேசிக்காய் சமனிலை ஓட்டம், புத்தாண்டு அழகு ராணி அழகு ராஜ தேர்வு போன்ற ஏராளமான புத்தாண்டு விளையாட்டுகள் இடம்பெற்றன, இதில் அனைத்து வயதினரும் பங்கேற்றினர்.

இதற்கிடையில், இலங்கை சிங்கப் படையணியின் யங் கூகர்ஸ் களகத்திற்கு நிதி திரட்டும் திட்டமாக அத்தியாவசிய அன்றாட மளிகை பொருட்கள் மற்றும் உணவு தொடர்பான பிற பொருட்களுடன் 'புத்தாண்டு கண்காட்சி' ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்படைத் தளபதி மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து 'புத்தாண்டு விளையாட்டு' வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, படையணி தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களுக்கு விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மற்றும் பரிசுப் பொதிகளை மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, திருமதி ஒமிலா ஜயவர்தன மற்றும் இலங்கை சிங்கப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சமிந்த திப்போட்டுகே ஆகியோரால் வழங்கப்பட்டது.

பேரவை உறுப்பினர்கள்,சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.