11th February 2020 17:50:49 Hours
அம்பேபுஸ்ஸவிலுள்ள இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் புதிய நியமனங்கள் பெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான ஒன்று கூடல் நிகழ்வானது இம் மாதம் (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ அதிகாரிகள் மற்ற 18 குடும்ப அங்கத்தவர்களை சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதி அவர்கள் வரவேற்றார். பின்பு இவர்கள் சிங்கப் படையணி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி, மற்றும் விநோதமான நிகழ்வுகளில் இணைந்து கொண்டு விருந்தோம்பல்களிலும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதனாயக , அவரது பாரியார் திருமதி முதனாயக, மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லாவல மற்றும் அவரது பாரியார் திருமதி பல்லாவல அவர்கள் இனைந்து சிறப்பித்தனர்.
இந்த ஒன்று கூடல் நிகழ்வின் மூலம் அதிகாரிகளுக்கு இடையில் உள்ள ஐக்கிய தொடர்பாடலானது வலுவடையும் நோக்கத்துடன் இந்த நிகழ்வானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. jordan Sneakers | Men's Footwear