01st April 2021 12:15:00 Hours
சாலியாபுர கஜபா படைத் தலைமையகத்தில் இரண்டு வாரங்களாக (மார்ச் 16-31) ஒத்திகை செய்யப்பட்ட பாகிஸ்தான் இலங்கை இராணுவத்தின் கூட்டு கள பயிற்சியான ஷேக் ஹேண்ட்ஸ் -1' இன் நிறைவு மற்றும் விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக புதன்கிழமை (31) இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார கலந்துக் கொண்டார்.
காலாட் படை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிலிபொல பயிற்சியின் பணிப்பாளர் பிரிகேடியர் சஞ்சீவ பெர்னாண்டோ, பாகிஸ்தான் மற்றும் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரிகள், அன்றைய பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை சாலியபுர படைத் தலைமையகத்திற்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
இரு நாடுகளுக்கும் இராணுவ அமைப்புகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு மற்றும் நட்பு உறவுகளை அடையாளப்படுத்துவதன் மூலம் கேமுனு படைத் கோட்டையில், அனைத்து வகையான தந்திரோபாய இராணுவ நடவடிக்கைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி மிகவும் யதார்த்தமான காட்சிகளையும் சூழ்நிலைகளையும் திறம்பட வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் உள்ளக பாதுகாப்பு உத்திகள் மற்றும் புரட்சியாளர்களுக்கு எதிரரன போர் தந்திரோபாயங்கள், பயங்கரவாத தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு இராணுவ தாக்குதல்கள், உயிர்வாழ்வு மற்றும் கண்காணித்தல், பயங்கரவாத மறைவிடங்கள் மீது தாக்குதல்கள், தற்கொலை குண்டுவீச்சு மற்றும் வெடிபொருட்களை அடையாளம் காணுதல், பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் உளவுத்துறை சேகரிப்பு , கிளர்ச்சியாளர்கள் மீதான உளவு, தாக்குதல்களை நிறைவேற்றுவது போன்றவை பயிற்சியளிக்கப்பட்டது.
அன்றைய பிரதம விருந்தினர் அனைத்து படையினருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளும் வழங்கினார். பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் சஞ்சீவ பெர்னாண்டோ நன்றி உரையாற்றுவதற்கு குழு படங்கள் எடுத்தல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை படையினர் நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவத்தின் பாராட்டுகளையும் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.
இராணுவ பயிற்சி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சேன வாடுகே, வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, 21வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் இராணுவத்தின் ஆறு அதிகாரிகள் மற்றும் 35 சிப்பாய்களும் இலங்கையின் 4 அதிகாரிகளும் 40 சிப்பாய்களும் இலங்கை இராணுவம் கஜபா படைத் தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவத்தின் காலாட் படை பணிப்பகத்தின் நெருங்கிய ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஷேக் ஹேண்ட்ஸ் -1’ இல பங்கு பற்றியிருந்தனர்.
கஜபா படை மற்றும் விஜயபாகு காலாட் படை படையினர் புதன்கிழமை (30) இதிரிகளாக , எதிரிகளின் மறைவிடத்திலிருந்து போலி தாக்குதலில் பங்கேற்றன. url clone | New Balance 991 Footwear