Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2019 16:35:18 Hours

சாரணர் சமேளத்தினால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட கௌரவிப்பு

சாரணர் பயிற்சிக்காக இராணுவத்தினரால் தொடர்ச்சியாக வழங்கப்படும் ஒத்துழைப்பிற்காக, ஹோமாகம சாரணர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை சாரணர் சம்மேளனத்தினால் இரண்டு விசேட பதக்கங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு 30ஆம் திகதி காலை வழங்கி வைக்கப்பட்டது. இக் குறித்த பதக்கங்களானது ஹோமாகம சாரணர் சம்மேளனத்தின் நிறைவேற்று தலைவர் திரு.புஸ்பகுமார மஹகமுல்லகே மற்றும் இராணுவ தலைமையகத்திற்கான மாவட்ட சாரணர் தலைவர் திரு. சுரங்க ஹன்டபன்கொட அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவத் தளபதியை சந்தித்த இருவரும் கடந்த வருடங்களில் அவர்களின் சாரணர் செயற்பாட்டு திட்டங்களை வெற்றிகரமாக நடாத்துவதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒத்த்துழைப்புக்கு நன்றியை தெரிவித்ததுடன், 2020 ஜனவரி மாதம் 9-12 தினங்களில் கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் இடம்பெறவிருக்கும் ‘ஹொடோரி-2020’ மாவட்ட சாரணர் முகாம்மை நடாத்துவதற்கு இராணுவத்தின் பங்களிப்பை வேண்டிக் கொண்டனர். இம்முகாமின் இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இச்சந்திப்பின போது குறித்த சாரண தலைவர்கள் கில்வில் ரூனியன்( விசேட வரையறுக்கப்பட்ட பதிப்பு) பதக்கம் மற்றும் ஹோமாகம மாவட்ட சாரணர் பதக்கம் ஆகிய இரண்டையும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு வழங்கி வைத்தனர். 1919 ஆண்டில் முதலாவது வூட் சாரணர் பாடநெறியினை கொண்டாடும் முகமாக இந்த வரலாற்று மதிப்புமிக்க கில்வில் ரூனியன் பதக்கமானது அனைத்து நாடுகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 சாரணர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்டுகின்றது. இந்த வருடாந்த கில்வில் ரூனியன் நிகழ்வானது 1921ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்றது.

இராணுவத்தினர் தங்களுடைய ஒத்துழைப்பை சாரணர் செயற்பாட்டிற்கு வழங்கிய அதேவேளை இளைஞர்களின் பண்புகளை சீர்படுத்தல் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த சாரணர் அமைப்பானது முயற்சிப்பதையிட்டு இராணுவத் தளபதியவர்கள் பாராட்டினார். 2020ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சாரணர் முகாமில் பயிற்சிப் பட்டறை,கருத்தரங்குகள்,செயற்பாட்டு பயிற்சி, நிகழ்வு ஊக்குவிப்பு,நேரடி இசை நிகழ்வு, படம் , வினாவிடைப் போட்டி, தீ மூட்டி மகிழ்வு உள்ளிட்ட மாலை நேர பொழுதுபோக்குகள் இடம்பெறும் என சிரேஷ்ட சாரணர்கள் தளபதியிடம் கூரினர்.

இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 1876ஆண்டு தொடக்கம் 1902ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இராணுவத்தில் சேவையாற்றிய லெப்டினன் ஜெனரல் ரொபட் பேடன்- பவல் அவர்களினால் சாரணர் அமைப்பானது 1907 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.1899 ஆண்டில் தென் ஆபிரிக்கா வில் இடம்பெற்ற இரண்டாவது போ யுத்தத்தில் ஏழு மாதங்களாக பிடியிலிருந்த மேப்கிங் நகரத்தை வெற்றிகரமாக பேடன்- பவல் மீட்டெடுத்தார். பேடன்- பவலின் படையினர் எங்கும் விஞ்சியதால் முதல் உதவிப் பணிகளின் நிர்வாகம், தகவல் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்களை மேற்கொள்ள அவர் உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தினார்.

ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு திரும்பிய பேடன்- பவல் அவர்கள் மேப்கிங் நகரத்தில் உள்ள இளைஞர்களைப் போல் இங்குள்ள இளைஞர்களில் இருந்தும் அதே நன்மையினைபெற்றுக் கொள்ளலாம் என அறிந்து கொண்டார். இந்த செயற்பாடானது சாரணர் அமைப்பை உறுவாக்க ஏதுவாக அமைந்தன. சாரணர் அமைப்பின் மூலம் கல்வி மற்றும் ஏனைய விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை ஏனையவர்களுக்கும் உதவுதல் மற்றும் சாரண திறன்களை கற்பித்தல் போன்ற விடயங்களும் இடம்பெறுகின்றன.Nike sneakers | adidas Campus 80s South Park Towelie - GZ9177