16th March 2023 20:20:51 Hours
சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பணியாற்றும் அனைத்து படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் சிப்பாய்கள் மரக்கரி / பழம் சிற்பங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள், கண்காட்சிகள், விரிவுரைகளை நடாத்தியதுடன், கரப்பந்து போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவையும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றன.
'அவள் தேசத்தின் பெருமை'என்ற தொனிப்பொருளில் 215 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மற்றும் இலங்கை கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஹர்ஷனி போதொட்ட ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
அமைப்பாளர்களின் அழைப்பின் பேரில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர், 'பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுவர் உரிமைகள்' என்ற தலைப்பில் விரிவுரையை ஆற்றினார். உணவு வேலைப்பாடுகள் மற்றும் கைவினைப் பொருட்கள் போட்டியை ஏற்பாடு செய்வதில் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படையினர் முன்னிலை வகித்தனர்.
2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உடற்பயிற்சி கூடத்தில் 9 அணிகளின் பங்குபற்றுதலுடன், யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் பெண் வீராங்கனைகளுக்கிடையிலான கரப்பந்து போட்டியும் இடம்பெற்றது,
மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட மற்றும் திருமதி ஹர்ஷனி போத்தொட்ட ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சர்வதேச மகளிர் தினத்தில் சாதனையாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
மாலை இசை நிகழ்ச்சியுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன.