24th April 2025 10:07:00 Hours
சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் ரைபிள் தேசிய நிலை III-2025 போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்களான இராணுவ துப்பாக்கிச் சூடு வீரர்களின் சிறந்த செயல்திறனை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புப் பாராட்டு விழாவில் பாராட்டினார்.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் துப்பாக்கி சுடும் திறனை வெளிப்படுத்திய 08 அதிகாரிகள் மற்றும் 21 சிப்பாய்கள் அடங்கிய குழுவின் சாதனைகளை பாராட்டு விழா அங்கீகரித்தது.
இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சுடன் இணைந்து தேசிய துப்பாக்கி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு 2025 மார்ச் 06 தொடக்கம் 08 வரை பூனேவாவில் உள்ள கடற்படை துப்பாக்கிச் சூடு தளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முப்படைகள், பொலிஸ் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மூன்று துப்பாக்கி சுடும் வீரர்கள் உட்பட 12 குழுக்களைச் சேர்ந்த 213 உள்நாட்டு துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவ சிறிய ஆயுத சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் ஆர்.பீ. முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ துப்பாக்கி சுடும் வீரர்களை வெற்றிக்கு வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகித்த சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.