26th April 2023 18:45:48 Hours
உள்ளக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான அறிவை மேலும் மேம்படுத்தும் முகமாக, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து 54 அதிகாரிகளுக்கு "உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம்" என்ற தலைப்பில் இரண்டு நாள் செயலமர்வை ஏப்ரல் 24 மற்றும் 25 ம் திகதிகளில் நடாத்தியது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்ளகப் பாதுகாப்பு தொடர்பான நிபுணத்துவத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயலமர்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ தலைமையகதின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் அறிவுறுத்தலுக்கமைய ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு நாள் செயலமர்வுக்கான விரிவுரைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய பிரதிநிதிகளான திரு ஆல்பர்ட் ஸ்கோன்வெல்ட், திருமதி வெரீனா நியூண்ட்டர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு பிராந்திய பிரதிநிதி எப்எஎஸ் திரு.சன்ன ஜயவர்தன, மற்றும் வவுனியா தலைமை காரியாலயத்தின் திரு அலெக்சாண்டர் புரோவ் ஆகியோர் வழங்கினர்.
இவ் விரிவுரையில், சம்பவ ஆராய்வு மற்றும் பயிற்சிகளும் இடம் பெற்றன. பட்டறையின் முடிவில், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் எஸ்பிஜீ கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தூதுக்குழுவின் பிரதிநிதிகளுக்கு சிறப்பு பாராட்டு சின்னங்களை வழங்கினர்.